நியூசிலாந்தில் புகைப்பிடித்தலுக்‍கு எதிரான சட்டத்தை நீக்‍குவதற்கு எதிர்ப்பு : புதிய அரசின் நடவடிக்‍கை பொது சுகாதாரத்தை பாதிக்கும் என நிபுணர்கள் கவலை

Nov 28 2023 7:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்தில் பதவியேற்றுள்ள புதிய அரசு புகைப்பிடித்தலுக்‍கு எதிரான சட்டத்தை நீக்‍குவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசிய கட்சி அதிக இடங்களை பெற்று 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. இந்தநிலையில் முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை, குறிப்பாக சிகரெட்டில் குறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு மற்றும் இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளது. நியூசிலாந்தில் முந்தைய ஆட்சியின்போது, 2008க்குப் பிறகு பிறந்தவர்கள் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இது பொது சுகாதாரத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00