வடகொரிய அதிபர் கிம்ஜாங்-உன்னின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளது : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம்

Mar 20 2017 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகொரிய அதிபர் கிம்ஜாங்-உன்னின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்மைக்காலமாக வடகொரியா, சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, அண்டை நாடான தென்கொரியா மற்றும் அதற்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அந்நாட்டின் Palm beach பகுதியில் விடுமுறைக்காக சென்றிருந்த அவர், அங்கு உயர்மட்ட அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். வடகொரியாவின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வடகொரியாவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங்-உன்-னின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறினார்.

வடகொரியாவுக்கு சீனா உதவுவதாகக் கூறி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்நாட்டை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2772.00 Rs. 2965.00
மும்பை Rs. 2792.00 Rs. 2957.00
டெல்லி Rs. 2804.00 Rs. 2970.00
கொல்கத்தா Rs. 2804.00 Rs. 2967.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00