அமெரிக்காவைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் : கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Mar 20 2017 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் இனவெறி காரணமாக இந்திய கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் Anakkampoyil என்ற கிராமத்தைச் சேர்ந்த Tomy Kalathoor Mathew என்ற 48 வயதான பாதிரியார், நேற்று மெல்பேர்ன் புறநகர் பகுதியான Fawkner என்ற இடத்தில் உள்ள செயின்ட்மேத்யூ தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு திருப்பலிக்கு தலைமையேற்று நடத்தவிருந்தார். அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில், 72 வயதான இத்தாலியைச் சேர்ந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியால் பாதிரியாரை குத்தியதால் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர், பாதிரியார் மயக்கமடைந்ததால், பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாதிரியார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், இந்தியாவில் பிறந்த பாதிரியார், இந்துவாகவோ அல்லது இஸ்லாமியராகவோதான் இருக்க முடியும் என்பதால், ஞாயிறு திருப்பலியை நடத்துவதற்கு அவருக்கு தகுதியில்லை என கருதி தாக்குதல் நடத்தியதாக மர்ம நபர் தெரிவித்தார். ஜூன் மாதம் 13-ம் தேதி Broad meadows மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையுடன் மர்ம நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இத்தாக்குதல் சம்பவம் அச்சமளிப்பதாக மெல்பர்ன் கத்தோலிக்க மறைமாவட்டம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல் தலைதூக்கி இருப்பது கவலையளிப்பதாக ஆஸ்திரேலியவாழ் இந்தியர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00