சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி - 100-க்கும் மேற்பட்டோர் பட்டினியால் மடிந்த அவலம்

Mar 22 2017 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

சோமாலியாவில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பொருளாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்து போயுள்ளது. இத்துடன் அந்நாட்டில் கடும் வறட்சியும்நிலவுகிறது. வறுமை காரணமாக உணவின்றி அங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அங்குள்ள ஜூப்பாலேண்ட் என்ற பகுதியில் ஒரே வாரத்தில் பட்டினி காரணமான 110 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 71 ஆயிரம் பேர் உணவின்றி உடல்நலம் பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அரசு வானொலி தனது இணையதளதில் வெளியிட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் பட்டினியால் பரிதவித்து வருவதாகவும் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவில் ஆறுகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00