6 நாடுகளின் பயணிகள் விமானத்தில் கேமரா, லேப்டாப் போன்ற உபகரணங்களை எடுத்துச் செல்ல தடை - பாதுகாப்பை கருதி இங்கிலாந்து அரசு நடவடிக்கை

Mar 22 2017 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கி, லெபனான், ஜோர்டான் உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், மின்னணு சாதனங்களை விமானத்தில் கொண்டுசெல்ல இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

வளைகுடா நாடுகளான எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க ஏற்கெனவே தடை விதித்திருந்தது. கைபேசி, மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு துருக்கி அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா அரசு அறிவித்துள்ள இதே திட்டத்தை தற்போது இங்கிலாந்து அரசும் அமல்படுத்தி உள்ளது. துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இங்கிலாந்து வரும்போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர தடை விதித்துள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் வெடிபொருட்கள் பதுக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இங்கிலாந்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00