ஆர்டிக் கடல் பகுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக குறையும் பனிப் பிரதேசம் - செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டு அமெரிக்க - ஐரோப்பிய விஞ்ஞானிகள் தகவல்

Mar 23 2017 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்க்டிக் கடல் பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பனிப்பிரதேசம் மிக வேகமாக குறைந்து வருவதாகவும், உலக வெப்பமத்தின் தாக்கமே இதற்கு காரணம் என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே மிக அதிகமாக உறைபனி நிலவும் ஆர்க்டிக் கடல் பகுதியில் ஆண்டுதோறும் இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் பனிப் பிரதேசம் மேலும் விரிவடைந்து கோடை மற்றும் வசந்த காலத்தில் சுருங்கத் தொடங்கும். ஆனால், தற்போது உலக வெப்பமயமாதல் பிரச்சனை காரணமாக, பனிப்பிரதேசங்களில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் கடும் குளிர் மிகுந்த ஆர்க்டிக் கடல் பகுதியில் பனிப் பிரதேசத்தின் பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளது. ஆர்க்டிக் குளிர் தொடர்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், இந்தப் பனிப்பிரதேசத்தின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவது தெரியவந்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்று என அவர்கள் தெரிவித்துள்ளனர். வடதுருவ பகுதியில் ஏற்பட்டிருக்கும் இந்த விளைவு உலக அளவிலான வானிலை மாற்றத்தின் மிகப்பெரிய தாக்கமாகவே பார்க்கப்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00