கில்கிட்-பல்திஸ்தான் பகுதியை தனது மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தான் அரசு முயற்சி : பிரிட்டன் கடும் கண்டனம்

Mar 26 2017 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கில்கிட்-பல்திஸ்தான் பகுதியை தனது மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தான் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதற்கு பிரிட்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் தெரிவித்துள்ளது. இதற்கான தீர்மானம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்கு அப்பால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் அமைந்திருக்கும் கில்கிட்-பல்திஸ்தான் பிரதேசத்தை பாகிஸ்தான் தனது ஆளுகைக்கு உட்பட்ட 5-வது மாகாணமாக அறிவிக்க சட்டத் திருத்தம் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு பிரிட்டன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கில்கிட்-பல்திஸ்தான் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1947-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகவும், தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00