அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் - சின்சினாட்டி நகர இரவு விடுதியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்

Mar 26 2017 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் இரவு விடுதி ஒன்றுக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் Ohio மாகாணத்தில் உள்ள Cincinnati பகுதியில் இயங்கி வரும் இரவு விடுதி ஒன்றில் ஏராளமானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விடுதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சராமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி அங்கும் இங்கும் ஒடினர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 13 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலை கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர் விடுதிக்குள் மறைந்துள்ளதாகவும் அவரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் Florida மாகாணத்தில் உள்ள Orlando பகுதியில் இயங்கி வந்த விடுதிக்குள் புகுந்து ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00