வெனிசூலாவில் அதிபர் மடுரோவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - வன்முறை வெடித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு - 3 பேர் பலி

Apr 21 2017 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
வெனிசூலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மடுரோவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 3 பேர் பலியாகினர்.

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதற்கு காரணமான அதிபர் நிக்கோலஸ் மடுரோ பதவி விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றின் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சியின் அழைப்பை அடுத்து, பல்வேறு நகரங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. கராகஸ் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியில், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. வன்முறைச் சம்பவங்களில், மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனால், இம்மாத்தில் மட்டும் வன்முறைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவது, அந்த நாட்டில் மிகுந்த பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00