கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர் - ஃபிரான்சில் அரங்கேறிய விநோதம்

Apr 21 2017 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரான்சில் கோழி முட்டைகளை அடைகாத்து ஓவியர் ஒருவர் குஞ்சு பொறித்த வினோத நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.

பிரான்சை சேர்ந்த 44 வயதான ஓவியர் ஆப்ரஹாம் பாய்ன்செவல், அதிசய நிகழ்வுகள் செய்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். இதற்கு முன்பு, கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை படைத்த அவர், 12 டன் எடையுள்ள சுண்ணாம்பு பாறைக்குள் ஒருவாரம் தங்கியிருந்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த நிலையில், கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியில் ஆப்ரஹாம் ஈடுபட்டார். பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து, சூடுபடுத்தி குஞ்சு பொறிக்க செய்யும் அல்லது "இன்குபேட்டர்" கருவி மூலம் குஞ்சுகள் பொறிக்க வைக்கப்படுவது வழக்கம். ஆனால் ஆப்ரஹாம், விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 12 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார். இவ்வாறு கடந்த மாதம் 29-ந் தேதி முதல் அவர் அடைக்காக்க தொடங்கினார்.

அன்றைய நாளில் இருந்து, 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து ஆப்ரஹாம் எழுந்துள்ளார். இந்நிலையில், 22 நாட்களுக்குப் பின்னர், ஆப்ரஹாம் அடைக்காத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வந்துள்ளன. இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் அவர் சாதனை படைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 19:30

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2862.00 Rs. 3061.00
மும்பை Rs. 2882.00 Rs. 3052.00
டெல்லி Rs. 2895.00 Rs. 3066.00
கொல்கத்தா Rs. 2895.00 Rs. 3063.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.00 Rs. 42000.00
மும்பை Rs. 42.00 Rs. 42000.00
டெல்லி Rs. 42.00 Rs. 42000.00
கொல்கத்தா Rs. 42.00 Rs. 42000.00