சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. ஏற்பாடு செய்திருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Apr 21 2017 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. ஏற்பாடு செய்திருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஒத்துழைக்காததால், அப்பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஆளும் பஷார் அல் ஆசாத் அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில், பஷார் அல் ஆசாத் அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்த்தப்பட்ட ரசாயன வெடிகுண்டு தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் 100 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, முதன்முறையாக ஏவுகணைகள் மூலம் சிரியாவின் விமானத்தளத்தை தாக்கி அழித்தது. இந்த சம்பவம் உலகநாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிரியாவில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா. தலையிட்டு, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சிரியாவுக்கான ஐ.நா. பொறுப்பாளர் கலந்துகொள்ளும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிரியாவுக்கான ஐ.நா. தூதர் De Mistura தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிரியாவில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ரஷ்யா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து கஜகஸ்தான் தலைநகர் அஸ்தனாவில், மே மாதம் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து, ஜெனீவாவில் அமைதிப் பேச்சுகள் நடைபெறும் என்றும், De Mistura தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00