ஆர்மீனிய இனப் படுகொலையின் 102-வது ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் அனுசரிப்பு : லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணி

Apr 25 2017 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்மீனிய இனப் படுகொலையின் 102-வது ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

மேற்கு ஆசிய பகுதியில் ஆர்மீனியா நாடு உள்ளது. அதன் மேற்கில் துருக்கி, வடக்கில் ஜார்ஜியா, கிழக்கில் அஜர்பை ஜான், தெற்கில் ஈரான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. முதலாம் உலகப்போரின் போது துருக்கியை ஆண்ட ஒட்டோமன் பேரரசர்களின் கட்டுப்பாட்டில் ஆர்மீனியா இருந்தது.

ஆர்மீனியா பகுதியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசித்தனர். இதனால் ஒட்டோமன் அரசுக்கும் ஆர்மீனிய சமுதாயத் தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கடந்த 1915 ஏப்ரல் 24-ம் தேதி ஆர்மீனிய பல்துறை அறிஞர்கள், ஒட்டோமன் படை வீரர்கள் 250 பேரை கொடூரமாக கொலை செய்தனர். அதைத் தொடர்ந்து சுமார் 15 லட்சம் ஆர்மீனிய மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்மீனிய இனப் படுகொலையின் 102-வது ஆண்டு நினைவுதினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தெருக்களில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்மீனியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேரணியாக சென்றனர். இந்தப்பேரணியில், துருக்கி அரசுக்கு கண்டனம் தெரிவித்து, கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00