வெனிசூலா அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு : வெனிசூலாவில் நிலவி வரும் அரசியல் பதற்றம் குறித்து, அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகள் கவலை

Apr 26 2017 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெனிசூலாவில், அதிபர் நிக்கோலஸ் மடுரோவுக்கு எதிராக கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில், பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில், கடந்த 2013-ம் ஆண்டு முதல், நிக்கோலஸ் மடுரோ அதிபராக பதவி வகித்து வருகிறார். இவரது ஆட்சியில், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிபர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் எனக்கோரி, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 3 வாரங்களாக இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்தப் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில், 21 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல்கள் மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மடுரோ தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, உடனடி தேர்தல் நடத்த வலியுறுத்தி, தலைநகர் கராகஸில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையால், 5 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

வெனிசூலாவில் நிலவி வரும் அரசியல் பதற்றம் குறித்து, அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00