சனி கிரகத்தை நெருங்குவதற்கான இறுதிக்கட்ட பயணத்தை தொடங்கிய நாசாவின் காசினி விண்கலம் கர்ணம் அடித்து சனி வளையங்களுக்குள் ஊடுருவியது

Apr 27 2017 9:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

சனி கிரகத்தை நெருங்குவதற்கான இறுதிக்கட்ட பயணத்தை தொடங்கிய நாசாவின் காசினி விண்கலம், கர்ணம் அடித்து சனி வளையங்களுக்குள் ஊடுருவியது. இது, சனி கிரக ஆராய்ச்சியில் ஓர் மைல்கல்லாக அமைந்தது.

சூரியக் குடும்பத்திலுள்ள சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997-ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி காசினி விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நுழைந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. இதுவரை சனிக்கிரகத்தை சுற்றி ஆய்வு செய்த காசினி விண்கலம், சனி கிரகத்தை நெருங்குவதற்கான தனது கடைசி பயணத்தினை நேற்று தொடங்கியது. சனி கிரகம் மற்றும் அதன் வளையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், காசினி விண்கலம் கர்ணம் அடித்து முதல் முறையாக ஊடுருவியது.

இது, சனி கிரக ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லாக அமைந்தது. இவ்வாறு சனி கிரகத்தின் 22 வளையங்களுக்குள்ளும் கர்ணம் அடித்து, கடைசியாக, செப்டம்பர் மாதம் 15-ம்தேதி சனி கிரகத்தில் விழுந்து தனது பயணத்தை காசினி விண்கலம் நிறைவு செய்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00