ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வடகொரியா ஒத்திகை நடத்தியதன் எதிரொலி : ஏவுகணை தடுப்பு கவண் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் - கொரிய தீபகற்பத்தில் உச்சக்கட்ட போர் பதற்றம்

Apr 27 2017 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வடகொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில், இந்த சவாலை எதிர்கொள்ளும்விதமாக ஏவுகணை தடுப்பு கவண் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வருவதை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாடுகளின் எச்சரிக்கை, ஐ.நா. சபையில் கடும் பொருளாதார தடை ஆகியவற்றை அலட்சியம் செய்து கடந்த 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் வடகொரியாவை தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது போர் தொடுக்கப்போவதாக வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து THAAD என்ற ஏவுகணை எதிர்ப்பு கவண் ஒன்றை அமைக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிக்கும் நோக்கில் வடகொரியா நேற்று ஏவுகணை பரிசோதனை நடத்தியது. அடுத்தடுத்து பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் 3, ஜப்பான் கடல்பகுதியில் விழுந்தது. இதனைத்தொடர்ந்து, வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்விதமாக THAAD என்ற ஏவுகணை எதிர்ப்பு கவண் அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. மேலும், தென்கொரியாவில், எதிர்ப்பு கவண் நிறுவும் பணிகளில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஏவுகணை எதிர்ப்பு கவண் அமைப்பதற்கான பாகங்கள், வாஷிங்டனில் இருந்து தென்கொரிய தலைநகர் சியோல் அருகே ஓசான் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை வந்தடைந்துள்ளது. இதனிடையே, எந்நேரமும் போர் மூளலாம் என்ற பதற்றம் கொரிய தீபகற்பத்தை பற்றிக்கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00