சீனாவில் நடைபெற்றுவரும் வருடாந்திர விமான சாகச நிகழ்ச்சி : பறக்கும் விமானத்தின் மீது நின்றபடி பிரிட்டன் வீரர்கள் செய்து காட்டிய சாகசங்களை பார்வையாளர்கள் கண்டுவியப்பு
Apr 28 2017 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நடைபெற்றுவரும் வருடாந்திர விமான சாகச நிகழ்ச்சியில், பறக்கும் விமானத்தின் மீது நின்றபடி, பிரிட்டன் வீரர்கள் செய்து காட்டிய சாகசங்கள், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
சீனாவின் Zhengzhou மாகாணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். இந்தப் போட்டியில் உலகின் தலைசிறந்த விமான சாகச வீரர்கள் பங்கேற்பதால், இப்போட்டிக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போட்டியை காண்பதற்காகவே, சுற்றுலா பயணிகள் பலர் சீனாவுக்கு வருகை தரும் நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டி, சீனாவின் Zhengzhou மாகாணத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளின் வீரர்கள், வெவ்வேறு விதமான சாகசங்களை நிகழ்த்துகின்றனர். பறக்கும் விமானத்தின் மீது நின்றபடி, பிரிட்டன் வீரர்கள் செய்துகாட்டிய சாகசங்கள், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
வரும் மே மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த உலகின் தலைசிறந்த 14 விமான சாகச குழுவினர் பங்கேற்றுள்ளனர். இதற்காக 42 சாகச விமானங்கள் ஷாங்ஜி விமான நிலையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளன.