50 ஆயிரம் விஷ தேள்களுடன் 33 நாட்கள் இருந்து கின்னஸ் சாதனை - தாய்லாந்து பெண் அசத்தல்

Jun 7 2017 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

50 ஆயிரம் விஷ தேள்களுடன் 33 நாட்கள் தங்கி இருந்து தாய்லாந்து பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்தை சேர்ந்த Kanchana Kaetkaew என்ற பெண்மணி, கின்னஸ் சாதனை படைக்க ஒரு விநோத முயற்சியை மேற்கொண்டார். இவர் ஏற்கெனவே கொடிய விஷம் கொண்ட தேள்களை தனது முகம், கழுத்து, கைகளில் 3 நிமிடங்கள், 28 நொடிகள் உலாவ விட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது இரண்டாவது முறையாக, 50 ஆயிரம் தேள்களுடன் கண்ணாடி பெட்டிக்குள் 33 நாட்கள் இருந்து மற்றொரு கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். மிகக்கொடுமையான விஷத் தன்மைகொண்ட கருந்தேள்கள் அவரது முகமெங்கும் சர்வசாதாரணமாக ஊர்ந்து சென்ற காட்சி, காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. மேலும் சில தேள்கள் இவரது வாய்க்குள் புகுந்த காட்சியும் காண்போரை பரபரப்புக்கு உள்ளாக்கியது. ஆனால் இவர் அவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் மிகவும் சர்வசாதாரணமாக இந்த சாதனையை செய்து முடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இதனால் தேள்களின் அரசி என பொருள்படும் வகையில் இவர் "Scorpion Queen" என அழைக்கப்படுகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00