அமெரிக்காவில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பீட்சா தயாரிப்பு - கலிஃபோர்னியாவை சேர்ந்த சமையல் கலைஞர்கள் உலக சாதனை

Jun 12 2017 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பீட்சா தயாரிக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மனித நேயத்தையும், நட்பையும் கொண்டாடும் விதமாக கலிஃபோர்னியாவை சேர்ந்த ஒரு தனியார் அமைப்பு சார்பாக நீளமான பீட்சா செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பீட்சாவை கலிஃபோர்னியாவை சேர்ந்த சமையல் கலைஞர்கள் தயாரித்து முந்தைய ஆண்டு சாதனையை முறியடித்துள்ளனர்.

மொத்தம் 7,808 கிலோ எடை கொண்ட இந்த பீட்சாவை தயாரிக்க 3,632 கிலோ மாவு, 1,634 கிலோ சீஸ் மற்றும் 2,542 கிலோ சாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 3 மைக்ரோவேவ் ஓவன்களில், 8 மணி நேரம் தயாரிப்பு பணி நடைபெற்றது. ஒவ்வொரு 17 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓவன்களை சமையல் கலைஞர்கள் இடம் மாற்றினர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானம், ஏழை மக்களுக்கு இலவச உணவு அளிக்க வழங்கப்பட்டது. இத்தாலி நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 6,082 அடி நீள பீட்சாவே இதுவரை உலக சாதனையாக இருந்தது. தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தயாரிக்கப்பட்ட 6,333 அடி நீள பீட்சா, புதிய உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00