கத்தார் உடனான உறவை சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் முறித்துக்கொண்டுள்ள விவகாரம் - கத்தாரில் உணவு கிடைக்காமல் ஒட்டகங்கள் தவிப்பு

Jun 21 2017 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கத்தார் உடனான உறவை சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் முறித்துக்கொண்டுள்ள நிலையில், கத்தாரில் உள்ள ஒட்டகங்களுக்கு உணவு கிடைக்காமல் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, கத்தார் மீது குற்றம் சுமத்திய சவுதி அரேபியா, தனது தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. சவுதியை தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து, ஏமன் உள்ளிட்ட நாடுகளும் கத்தார் நாட்டுடனான தங்கள் உறவுகளை துண்டித்துக்கொண்டு, தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன. நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதால், ஏராளமான குடும்பங்களும் பிரிந்து கிடக்கின்றன. மேலும், பெரும்பான்மையான உணவு பொருட்களுக்கு அண்டை நாடுகளையே சார்ந்திருந்த கத்தாருக்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கத்தாரில் உள்ள கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கத்தார் - சவுதி எல்லையில் ஒட்டகங்களுக்கு தாராளமாக உணவு கிடைத்து வந்ததாகவும், தற்போது எல்லைகள் மூடப்பட்டு விட்டதால், ஒட்டகங்கள் உணவை தேடி அலைவதாகவும், அதன் உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர கத்தார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00