இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் அரைகால் சட்டை அணிய தடை : குடுமி மற்றும் பெண்கள் உடுத்தும் குட்டை பாவடை அணிந்துவந்து மாணவர்கள் எதிர்ப்பு

Jun 23 2017 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் அரைகால் சட்டை அணிய பள்ளி நிர்வாகம் தடைவிதித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக, குடுமி மற்றும் பெண்கள் உடுத்தும் குட்டை பாவடை அணிந்துவந்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளனர்.

இங்கிலாந்தின் எக்சிடர் நகரில் தற்போது வெப்பமான காலநிலை நிலவுவதால் அங்குள்ள பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் முழுகால் சட்டைக்கு பதிலாக அரைகால் சட்டை அணிந்து பள்ளிக்கு சென்றனர். இதனை கண்டித்த பள்ளி நிர்வாகம், அரைகால் சட்டை அணிந்து பள்ளிக்குவர தடையும் விதித்தது.

பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல மாணவர்கள், " வெப்பமான சூழல் நிலவும் போது பேண்ட் அணிந்து வகுப்பறையில் அமர்வது அசவுகரியமாக உள்ளது. இதனால், ட்ரவுசர் அணிந்து பள்ளிக்கு வந்தோம். ஆனால், நிர்வாகம் அதற்கு அனுமதிக்க வில்லை" எனக் கூறி பெண்கள் அணியும் குட்டைப் பாவாடையை அணிந்து பள்ளிக்கு வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்ப்பை அடுத்து அப்பள்ளியின் தலமை ஆசிரியர்," இந்தப் பள்ளியின் சீருடையில் ட்ரவுசர் இல்லை. எனினும் மாணவர்களின் போராட்டம் குறித்து அனைவரிடமும் பேசி முடிவெடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00