கொலம்பியாவில் 150 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து - 9 பேர் உயிரிழப்பு - பலர் மாயமானதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்

Jun 26 2017 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலம்பியா நாட்டில் 150 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற படகு, ஏரியில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். மாயமான 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

கொலம்பியா நாட்டின் guatape பகுதியில் ஏரளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் அங்குள்ள ஏரியில் 150க்கும் மேற்பட்டசுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென நீரில் மூழ்கியது. இதனால் தண்ணீரில் தத்தளித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, தகவல் அறிந்து, படகில் இருப்பவர்களை மீட்க அந்நாட்டு விமான படை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. படகு முழ்கியதற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாயமான 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00