சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விலகி ஹாங்காங் தனி நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் : கருப்பு உடை அணிந்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

Jun 26 2017 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விலகி ஹாங்காங் தனி நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் எனக்கோரி, ஏராளமானோர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் கட்டுண்டு கிடந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் கட்டுப்பாடு என்ற கவசத்தோடு பிரிட்டனின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப தன்னாட்சி அதிகாரங்களுடன் கூடிய பொருளாதார நிர்வாகச் சட்டங்களை ஹாங்காங் கொண்டுள்ளது. தனித்துவமான நாணயம், சட்டத்திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள், அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றில் சீனாவிடமிருந்து வெற்றி பெற்று தனித்துவமான கொள்கைகளை கொண்டுள்ளது. வானுயர்ந்த கட்டடங்கள், அதிகவேக பாதைகள், திகைக்க வைக்கும் மேம்பாலங்கள் என பொருளாதார வளர்ச்சியிலும், நாகரிக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் ஹாங்காங், 'ஆசியாவின் நகரம்' என செல்லப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து மீண்டு, சீனாவின் கட்டுப்பாட்டில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலுமாக விலகி தனி நாடாக பிரகடனப்படுத்தக்கோரி ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு உடை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் ஹாங்காங் கொண்டுவரப்பட்டு, 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வரும் 1-ம் தேதி சீன அதிபர் Xi Jinping ஹாங்காங் வரவுள்ளார். ஹாங்காங் சீனாவுடன் இணையும் விவகாரம் ஒரே நாளில் நடைபெறாது என்றும், அது படிப்படியாக நடைபெற வேண்டிய விஷயம் என்றும் ஹாங்காங் முன்னாள் தலைவர் Tung Chee-hwa தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஹாங்காங், சீன குடியரசின் ஒரு தனித்துவமான பகுதி என்பதை ஹாங்காங் மக்கள் தெளிவாக உணர வேண்டும் என்றும், சுதந்திரம் குறித்த எந்தவொரு பேச்சும், ஹாங்காங்கில் மட்டும் நடைபெறு சாத்தியமில்லை என்றும் ஹாங்காங்கின் தற்போதைய தலைவர் Carrie Lam Cheng தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00