உயிருள்ள பாக்டீரியாவின் DNA-வில் வீடியோவைப் பதிவேற்றி ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை

Jul 14 2017 10:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் போஸ்டன் நகரிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த சாதனையை செய்துள்ளனர். இதன்மூலம் மனிதனின் நினைவலைகளை DNA மூலக்கூறுகள் மூலம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர். CRISPR எனப்படும் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 1870களில் எடுக்கப்பட்ட குதிரை ரேஸ் குறித்த வீடியோ பதிவை பாக்டீரியாவின் DNA-வில் பதிவேற்றம் செய்ததுடன், அதனை வெற்றிகரமாக தரவிறக்கம் செய்தும் விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். இதுகுறித்து பேசிய விஞ்ஞானி சேத் ஷிப்மேன், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றை மூலக்கூறுகளில் சேமிப்பது சிறப்பானதாக இருக்கும் என்றும், DNA மூலக்கூறுகளை வரலாற்று ஆய்வாளர்களாக மாற்றும் ஒரு முயற்சியே தங்களது ஆய்வு என்றும் தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் மூலம் மனித மூளையில் உள்ள DNA-க்கள் மூலம் நினைவலைகளை வீடியோ பதிவாகப் பார்க்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00