அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் இரு தரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலி : அவசர நிலை பிரகடனம்

Aug 13 2017 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் இரு தரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலியானதை தொடர்ந்து, அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் அடிமைகள் சார்பு படையை ராபர்ட் இ லீ என்பவர் வழிநடத்திச் சென்றார். இவரது சிலை சார்லொட்டஸ்வில்லி நகரில் உள்ள பூங்காவில் இருந்தது. தற்போது, அவரது சிலை அகற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதனைக் கண்டித்து அந்நகரில் ஆயிரக்கணக்கானோர் நேற்று பேரணி நடத்தினர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் பேரணி நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், 35 வயது மதிக்கத்தக்க பெண் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 13-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், இன மாறுபாடுகளை களைந்து அனைவரும் ஒரு நாட்டு மக்களாக ஒன்றினைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00