அமெரிக்காவின் குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா அச்சுறுத்தல் : குவாம் மக்கள் எவ்வித அச்சமுமின்றி கடற்கரையில் பொழுதை கழிக்கின்றனர்

Aug 16 2017 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா அச்சுறுத்தல் விடுத்த போதிலும், அங்குள்ள மக்கள் எவ்வித அச்சமுமின்றி கடற்கரையில் பொழுதைகழித்து வருகின்றனர்.

வடகொரிய ராணுவம் தொடர்ந்து அணுஆயுத ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை தங்களுக்கு இருப்பதாகவும் அண்மையில் வடகொரியா அறிவித்தது.

அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஐ.நாவில் பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இதையடுத்து, பசிபிக் கடலை ஒட்டியுள்ள அமெரிக்க ராணுவத்தின் பயிற்சி முகாம் அமைந்திருக்கும் குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இருப்பதாக வடகொரியா அச்சுறுத்தல் விடுத்தது. இதனால், குவாம் தீவு மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் அதுபற்றி பீதியடையத் தேவையில்லை என குவாம் அரசு தெரிவித்தது. எனவே, வடகொரியாவின் அச்சுறுத்தை கண்டுகொள்ளாமல், தற்போது குவாம் மக்கள் வழக்கம் போல், கடற்கரையில் மகிழ்ச்சியுடன் வலம் வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00