லண்டன் நகரின் அடையாளமாக திகழும் பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 21-ம் தேதி முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இயங்காது என அறிவிப்பு

Aug 16 2017 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

லண்டன் நகரின் அடையாளமாக திகழும் பிக்பென் கடிகாரம், பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 21-ம் தேதி முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்ற கட்டடத்தில் 1859-ம் ஆண்டில், பிக்பென் என்று அழைக்‍கப்படும் மணிக்கூண்டு திறக்கப்பட்டது. கடந்த 157 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடிகாரம் லண்டன் நகரின் அடையாளமாகவும். உலகின் முக்கிய வரலாற்று சின்னமாகவும் திகழ்ந்து வருகிறது. எலிசபெத் கோபுரத்தில் அமைக்‍கப்பட்டுள்ள இந்த கடிகாரம் வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக, 21-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு வரை, 4 வருடங்கள் இயங்காது என அறிவிக்‍கப்பட்டுள்ளது. எனினும், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது இந்த கடிகாரம் ஒலிக்‍கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 800 கோடி ரூபாய் செலவில் திருத்தியமைக்கப்படவுள்ள பிக்‍பென் கடிகாரத்துக்‍கு, ஆரம்ப காலக்‍கட்டத்தில் என்ன வண்ணம் பூசப்பட்டதோ, அதே வண்ணம் மீண்டும் பூசப்படவுள்ளது. இதற்கு முன்னர் 1983, 1985, 2007 ஆகிய ஆண்டுகளில், பிக்பென் கடிகாரத்தில் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்ற போதும், குறுகிய காலத்துக்கு மட்டுமே கடிகாரத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00