Sierra Leone நாட்டில் பயங்கர நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 400-ஆக அதிகரிப்பு

Aug 18 2017 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

Sierra Leone நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை, 400-ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்‍க நாடான Sierra Leone, உள்நாட்டுப் போர் மற்றும் கடும் வெள்ளப் பெருக்‍கில் சிக்‍கித் தவித்துவருகிறது. இதில் இருந்து மீள்வதற்குள், அந்நாடு, மீண்டும் மிகப்பெரிய துயரத்தை சந்தித்துள்ளது. தலைநகரான Freetown-ல் பெய்த கனமழை காரணமாக, கடந்த திங்கட் கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 3 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோரின் வீடுகள் மண்ணில் புதைந்தன. 4 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 400-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சுமார் 600 பேர் காணாமல் போயுள்ளனர். சிலர் இடிபாடுகளில் சிக்‍கி இன்னும் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய உறவினர்களையும், உடைமைகளையும் இழந்து தவிக்‍கும் Freetown மக்‍களுக்‍கு, சீன அரசும், சீன மக்‍களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஆதரவுக்‍ கரம் நீட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00