இந்தோனேஷியாவின் தேசியக் கொடியை தவறாக அச்சிட்டதற்காக, மலேசியா மன்னிப்பு கோரியுள்ளது

Aug 22 2017 6:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சில தினங்களுக்கு முன்பு, தென் கிழக்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. இதில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு, வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. அதில், போட்டியில் பங்கேற்றுள்ள, 11 நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும் வீரர்களின் விவரங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள், அந்த கையேட்டில் இருந்த, தங்கள் நாட்டுக் கொடியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். கொடியின் மேல் பகுதியில், சிவப்பு நிறத்துக்கு பதிலாக வெள்ளை நிறமும், கீழ் பகுதியில், வெள்ளை நிறத்துக்கு பதிலாக சிவப்பு நிறமும் தவறாக அச்சிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த இந்தோனேஷியர்கள், மலேசிய அரசை, சமூக வலைதளங்களில் கடுமையாக சாடினர். இதையடுத்து, மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன், இந்தோனேஷிய அமைச்சர் இமாம் நஹ்ரவியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். கொடி தவறாக அச்சிடப்பட்டதில் உள்நோக்கம் இல்லை என்று கூறியுள்ள மலேசியா, இந்தோனேஷிய மக்களின் மனங்களை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00