உலகின் அதிவேக புல்லட் ரயில் : சீனாவில் செப்டம்பர் 21 முதல் இயக்கம்

Aug 22 2017 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய, உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அடுத்த மாதம் 21-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

சீன தலைநகர் பீஜிங்கிலிருந்து, வர்த்தக நகரமான ஷாங்காய் இடையே, அடுத்த தலைமுறைக்கான 'புஜிங்' என்ற புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. சராசரியாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில், ஆயிரத்து 250 கிலோ மீட்டர் தொலைவை வெறும் நான்கரை மணி நேரத்தில் கடந்து விடும். தற்போது இந்த தொலைவை கடக்க 6 மணி நேரமாகிறது. முதல் முறையாக முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட புஜிங் புல்லட் ரயில், அதிகபட்சமாக மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். கடந்த மாதம் 27-ம் தேதி, இந்த புல்லட் ரயிலின் பாதுகாப்பு மற்றும் அதிகபட்ச வேகம் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 21-ம் தேதி முதல் இந்த ரயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் தினமும் 7 முறை பீஜிங்கிலிருந்து ஷாங்காய்க்கு சென்று வரும். 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பீஜிங்-டியான்ஜிங் இடையே மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயிலை சீனா முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து, புல்லட் ரயிலுக்கான வழித்தடங்கள் சீனாவில் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00