நார்வே நாட்டில் உள்ள மிக கடுமையான Hanshelleren மலை முகட்டில் 20 நிமிடத்தில் ஏறி செக் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் சாதனை

Sep 8 2017 9:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

நார்வேயின் ஃப்ளாட்ஆங்கேரில் உள்ள Hanshelleren கிரானைட் குகையின் மலை முகட்டில் இதுவரை யாரும் ஏறியதில்லை. இந்தக் முகட்டின் மீது ஏற வேண்டும் என்பது பலருக்கும் வெறும் கனவாகவே உள்ளது. இந்நிலையில், முன்னணி மலையேறும் வீரர்களில் ஒருவரான செக் நாட்டை சேர்ந்த 24 வயது ஆடம் ஓன்ரா, இந்த முகட்டின் மீது 20 நிமிடத்தில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக மலையேற்றத்தில் ஈடுபட்டு வரும் ஆடம், யாருமே ஏறாத மலை முகட்டில் ஏறியது ஒரு அற்புதமாக உணர்வு என கூறியுள்ளார். 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முறையாக இந்த மலை முகட்டுக்கு வந்த ஓரம், தாம் ஏறவேண்டிய பாதையில் துளைகள் இட்டுள்ளார்.

வெற்றிகரமாக மலை ஏறிய பிறகு, தனது கண்களில் நீர் வழிந்ததை உணரமுடிந்தது என்றார் ஆடம். மேலும், இந்த மலை முகட்டில் ஏறியது தனது பயணத்தின் பெருமை மிக்க தருணம் என்று கூறிய ஓரம், இந்த உலகத்தில் தான் ஏற வேண்டிய மலைகள் நிறைய உள்ளதாக தெரிவித்தார்.

வரும் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக மலையேற்றம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், தற்போதிலிருந்தே ஆடம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00