லண்டனில் நடைபாதை பயணிகள் கூட்டத்தில் கார் பாய்ந்ததில் 11 பேர் படுகாயம் : தீவிரவாதத் தாக்குதலாக இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை

Oct 8 2017 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் தலைநகரம் லண்டனில் நடைபாதை பயணிகள் கூட்டத்தில் கார் பாய்ந்ததில் 11 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லண்டனில் உள்ள தெற்கு கென்சிங்டனில் பழைமைவாய்ந்த தேசிய வரலாற்று அருங்காட்சியகம் அமைந்துள்ள பரபரப்பான பகுதியில் நடைபாதையில் ஏராளமான பாதசாரிகள் சென்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு கார் ஒன்று பாய்ந்து வந்து மோதியதில் பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த காரின் ஓட்டுனரை கைது செய்த ஸ்காட்லாந்து யார்டு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் லண்டன் நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் அருகே பாதசாரிகள் மீது காரை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் ஜூன் மாதம் லண்டன் பாலம் அருகே நடைபெற்ற இதேபோன்ற மற்றொரு தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இந்த ஆண்டு மட்டும் இங்கிலாந்தில் 5 தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இன்றைய தாக்குதலுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் இந்த மோதலில் 11 பேர் படுகாயமடைந்ததாக போலீசார் முதல்கட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்தியுள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த பொதுமக்கள் மற்றும் போலீசார், மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கு நன்றிகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00