பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரான Harvey Weinstein மீது ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்டோர் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் : ஃபிரான்ஸ் உயரிய விருதை திரும்பப் பெற முடிவு

Oct 17 2017 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரான Harvey Weinstein மீது, ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்டோர் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ள நிலையில், அவருக்‍கு வழங்கப்பட்டுள்ள ஃபிரான்ஸ் அரசின் உயரிய விருதை திரும்பப் பெற அந்நாடு முடிவு செய்துள்ளது.

அமெரிக்‍காவில் இருந்து வெளியாகும் "தி நியூயார்க்‍ டைம்ஸ்" என்ற பத்திரிகை, பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரான, 65 வயதாகும் Harvey Weinstein மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளைக்‍ கொண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 1990 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில், இத்தாலிய நடிகை Argento உட்பட 13 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் Weinstein ஈடுபட்டதாக கடுமையான புகார்கள் தெரிவிக்‍கப்பட்டன. மேலும், Weinstein பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக, பாதிக்‍கப்பட்ட பெண்களில் 3 பேர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியும், Weinstein மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

ஆஸ்கார் விருதுபெற்ற Shakespeare in Love மற்றும் Chicago போன்ற திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்து, ஹாலிவுட் திரையுலகில் சக்‍திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக உருவான Harvey Weinstein, அமெரிக்‍க ஜனநாயக கட்சியின் நீண்டகால நன்கொடையாளராக இருந்துவருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதாகக்‍ கூறப்படும், Legion of Honour விருது, கடந்த 2012-ம் ஆண்டு Harvey Weinstein-க்‍கு வழங்கப்பட்டது. அப்போதைய ஃபிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, இந்த விருதை Weinstein-க்‍கு வழங்கினார். இந்நிலையில், Weinstein-க்‍கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெற ஃபிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனிடம் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள Harvey Weinstein-க்‍கு வழங்கப்பட்டுள்ள லீஜியன் ஆஃப் ஹானர் விருது திரும்பப் பெறப்படுமா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மேக்ரான், அதற்கான நடவடிக்கையை தான் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00