அரசு முறை பயணமாக இந்தியா வந்தார் இத்தாலி பிரதமர் -ரெயில்வே பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட 6 ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்து

Oct 31 2017 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீவிரவாதிகளின் புகலிடங்களை அழிக்கும் விவகாரத்தில், உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என்று, இந்தியாவும், இத்தாலியும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இத்தாலி பிரதமர் பவுலோ ஜென்டிலோனி, பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், தீவிரவாதம் மற்றும் இணையவழிக் குற்றங்களால் எழுந்துள்ள சவால்கள் உள்ளிட்டவை குறித்து, விரிவாக ஆலோசனை நடத்தினர். அனைத்து வகையிலான தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படவும், இணையவழி குற்றத்துக்கு எதிராக இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியா, இத்தாலி இடையே, ரயில்வே துறை பாதுகாப்பு, எரிசக்தி, பரஸ்பர முதலீடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்டவை தொடர்பாக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். தீவிரவாதிகளின் புகலிடங்கள், தீவிரவாத உள்கட்டமைப்பு, தீவிரவாத அமைப்புகளின் தகவல் தொடர்புகளை அழிக்கும் விவகாரங்களிலும், எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் விவகாரத்திலும் உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என, இருவரும் வலியுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00