இரவுக்கும் பகலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவல்

Nov 25 2017 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரவுக்கும் பகலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, கடந்த சில ஆண்டுகளாக இரவு, பகல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி, உலகளவில் இரவுக்கும் பகலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்நிறுவனம் வெளியட்டுள்ள ஆய்வறிக்கையில், பூமி முழுவதும் பல பகுதிகளில் இரவும், பகல் போலவே மாறிவருகிறது. பல இடங்களில் பகலுக்கும், இரவுக்கும் வித்தியாசம் இல்லை எனவும், பல இடங்கள் இரவில் கூட, மிகவும் அதிக வெளிச்சத்துடன் காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2.5 சதவிகிதத்திற்கும் அதிகமாக பூமியின் ஒளி அளவு அதிகரித்து உள்ளது. இதனால் பகல் அளவு ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக எண்ணெய் வள நாடுகளான துபாய் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகள், மேலும் ஆசியாவில் இருக்கும் இந்தியா, மலேசியா, சீனா போன்ற நாடுகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த நாடுகளில் இரவுகளே இருக்காது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கு காரணம் இந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் மிகவும் மோசமான விளக்குகளே என்றும் தற்போது பயன்படுத்தும் விளக்குகளை மொத்தமாக தவிர்த்துவிட்டு, புதிய விளக்குகளை பயன்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் இந்தியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருளை பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வு வெளியிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00