பிரபஞ்ச பேரழகியாக தென்னாப்பிரிக்காவின் டெமிலி தேர்வு - லாஸ் வேகாசில் நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில் முன்னாள் அழகி மகுடம் சூட்டி வாழ்த்து

Nov 27 2017 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டெமி லீ நெல் பீட்டர்ஸ் என்ற 22 வயது பெண், 2017-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 2017-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. இதன் முதல்நிலை போட்டியில் 92 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து 16 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்வாகினர். பின்னர் 10 அழகிகள் அடுத்த சுற்றுகளுக்குள் நுழைந்தனர். இறுதி சுற்றுக்கு தென் ஆப்ரிக்கா, கொலம்பியா, ஜமைக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 3 அழகிகள் தேர்வாகினர். இதில் மிஸ் தென்னாப்ரிக்காவான 22 வயது டெமி லீ நெல் பீட்டர்ஸ், பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற இவர், இறுதி சுற்றில் கேட்கப்பட்ட, பணியிடத்தில் பெண்கள் குறித்த கேள்விக்கு அளித்த பதிலின் மூலம் முதலிடம் பிடித்தார். கொலம்பியாவைச் சேர்ந்த லாரா இரண்டாம் இடத்தையும், ஜமைக்காவை சேர்ந்த டேவினா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00