இஸ்ரேலின் புதிய தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு - பல்வேறு நாடுகள் கண்டனம்

Dec 7 2017 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக அங்கிகரித்து அமெரிக்காஅதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு பாலஸ்தீனம், சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அறிவித்துள்ளதை தொடர்ந்து ஜெருசலேம் நகரில் ஏற்றப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் விளக்குகளை பாலஸ்தீனர்கள் அனைத்து விட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அத்துமீறலை சகித்துகொள்ள முடியாது என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அரசு உயரதிகாரிகள் கூட்டத்தில்உரையாற்றிய ரவுஹானி அமெரிக்க சதி திட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாதி, இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

அமெரிக்காவின் இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீயை மூட்டிவிட்டு மிகப்பெரிய பேரழிவாக முடியும் என்று அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான துருக்கி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள துருக்கி துணை பிரதமரும் அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளருமான பெகிர் போஸ்டக், 'ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும், இந்த உலகையும் எப்போது அணையும் என்று குறிப்பிட முடியாத தீக்குள் தள்ளிவிடும்' என தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் பகுதியில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றி ஜெருசலேமை புதிய தலைநகராக அறிவிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த முடிவு சகிப்புத்தன்மையின்மையையும், மூடத்தனத்தையும் காட்டுகிறது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷுவாங், 'இந்த முடிவால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கவலை கொள்ள வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்துக்கான தேவைகளை அனைத்து தரப்பினரும் கருத்தில் கொள்ள வேண்டும். பாலஸ்தீனிய பிரச்சனைக்கான அடிப்படை தீர்வுகளை பாதிக்காதவாறும் அப்பகுதியில் புதிய மோதல்களை உருவாக்காத வகையிலும் நமது சொற்களும் செயல்பாடுகளும் அமைய வேண்டும்' என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல்- பாலஸ்தீனம் தொடர்பான ஐ.நா முடிவின் படியே நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். பழமையானஜேருசலேம் நகரம் பாலஸ்தீனர்கள் மற்றும் யூதர்களுக்கு சொந்தமான நகரமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00