மீன்களுக்கு நடுவே நீந்தும் சான்டா கிளாஸ் - ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்

Dec 23 2017 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஃபிரான்ஸில் உள்ள மீன் கண்காட்சியகத்தில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணித்த ஒருவர், குழந்தைகளை மகிழ்வித்து வருகிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாகக்‍ கொண்டாடப்படவுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரம்மாண்ட குடில், கிறிஸ்துமஸ் மரம் போன்றவைகளை கிறிஸ்தவர்கள் தங்களது இல்லத்தில் அலங்கரித்து வைத்துள்ளனர். இந்நிலையில், ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள மீன் கண்காட்சியகம் ஒன்றில், கிறிஸ்துமஸ் விழாவுக்‍கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், வண்ண மீன்களுக்‍கு மத்தியில் நீந்தி குழந்தைகளை மகிழ்வித்து வருகிறார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பார்த்து ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00