ஜெருசலேம் விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு, இஸ்ரேல் கடும் கண்டனம்

Dec 23 2017 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெருசலேம் விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு, இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெருசலேம் தான் இப்போதும், எப்போதும் இஸ்ரேலின் தலைநகர் என அந்நாட்டு பிரதமர் Benjamin Netanyahu உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். மேலும், டெல்அவிவ்-ல் இருந்து ஜெருசலத்திற்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றி, அலுவலகத்தை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டிரம்ப்பின் அறிவிப்புக்கு, உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன. தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்காவின் ஜெருசலம் அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி, ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஐ.நா. தீர்மானத்திற்கு, இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்காவுக்கு ஆதரவாக வெறும் 9 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதனிடையே, ஜெருசலேம் விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, ஜெருசலேம் தான் இப்போதும், எப்போதும் இஸ்ரேலின் தலைநகர் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்த அத்தனை நாடுகளுக்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஸா பகுதியில், அதிபர் டிரம்ப்பின் உருவபொம்மையை எரித்து, பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00