பப்புவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு : சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

Feb 26 2018 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்‍டர் அளவில் 7 புள்ளி 5 ஆக பதிவானபோதிலும் சுனாமி எச்சரிக்‍கை எதுவும் விடுக்‍கப்படவில்லை.

பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ‍பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 புள்ளி 5 ஆக பதிவானது. எங்கா மாகாணத்தின் போர்கெரா பகுதியை மையமாகக்‍ கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை சீரானது. தீவிலுள்ள சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00