சீனாவில் அதிபராகவோ, துணை அதிபராகவோ 2 முறை மட்டுமே ஒருவர் பதவி வகிக்க முடியும் என்ற தடையை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு தீர்மானம்

Feb 26 2018 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில், அதிபராகவோ, துணை அதிபராகவோ இரண்டு முறை மட்டுமே ஒருவர் பதவி வகிக்க முடியும் என்ற தடையை நீக்க அந்நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தீர்மானித்துள்ளது.

சீனாவின் அதிபராக தற்போது பதவி வகித்துவரும் ஜி ஜின்பிங், கடந்த 2013-ம் ஆண்டு, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

சீனாவில், "பத்தாண்டுகள் வரை ஆட்சி செய்து, இரண்டாவது பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்கள், அடுத்த முறையாக அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது" என்னும் நிபந்தனை உள்ளது. இந்த நிபந்தனையை நீக்கம் செய்யப்போவதாக கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமைக் குழு மாநாடு, தலைநகர் பெய்ஜிங்கில் இன்று நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள நிபந்தனை நீக்கம் செய்யப்பட உள்ளது. இந்தப் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், 2022-ம் ஆண்டையும் கடந்து, சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் அசைக்க முடியாத சக்தியாக தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00