ஆஸ்திரேலியாவில் முல்லட் வகை மீன்களின் வடிவில் உருவாக்கப்பட்ட சிகையலங்காரத் திருவிழா : ஏராளமான சிகையலங்காரப் பிரியர்கள் பங்கேற்பு

Feb 26 2018 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் Mullet வகை மீன்களின் வடிவில் உருவாக்‍கப்பட்ட சிகையலங்காரத் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான சிகையலங்காரப் பிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் உள்ள Kurri Kurri நகரில் இத்திருவிழா நடைபெற்றது. நமது நாட்டில் சங்கரா என அழைக்‍கப்படும் மீன்களுக்‍கு மிகுந்த வரவேற்பு உண்டு. இந்த மீன்களின் வகையைச் சேர்ந்த Mullet வகை மீன்கள் ஆஸ்திரேலியாவில் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த மீன்களை உணவுப்பழக்‍கமாக்‍ கொண்டவர்கள் இணைந்து இத்திருவிழவைக்‍ கொண்டாடி மகிழ்ந்தனர். Laura Johnson என்பவர் ஒரு தனியார் ஹோட்டலில் இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதில் 150க்‍கும் மேற்பட்டவர்கள் 5 குழுக்‍களாக பங்கேற்றனர். இத்திருவிழாவில் பங்கேற்றவர்கள் தங்கள் சிகையலங்காரத்தை Mullet வகை மீன்களின் பல்வேறு வடிவங்களில் உருவாக்‍கியிருந்தார்கள். சிறந்த வடிவமைப்புடன் கூடிய சிகையலங்காரத்தைக்‍ கொண்டவருக்‍கு பரிசு வழங்கப்பட்டது. இவ்வகை சிகையலங்காரங்கள் 1970ம் ஆண்டு முதல் 1980 வரை புகழ்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00