உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்கான நினைவு பரிசு : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தயாரிக்கும் பணி தீவிரம்
Feb 27 2018 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்கான நினைவு பரிசுப் பொருட்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன.
திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. ஹாலிவுட்டில் சிறந்த படங்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோருக்கு இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக தேர்வு செய்யப்பட்ட படங்கள், நடிகர், நடிகைகள் ஆகியோர் அடங்கிய பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியூயார்க் நகரின் WALDEN நகரில், ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் நினைவு பரிசுப் பொருட்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 13 புள்ளி ஐந்து அங்குலம் நீளமும், 8 புள்ளி 5 pound எடையும் கொண்ட ஆஸ்கர் சிலைகள் தயாரிப்பு பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். கலையம்சம் கொண்ட இந்த சிலைகள் தங்கமுலாம் பூசப்பட்டு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.