திரைத்துறைக்‍கான உலகின் மிக உயரிய ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் கோலாகலம் - 'டன்கிரிக்' திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் - விழா மேடையில் பாலிவுட் நட்சத்திரம் ஸ்ரீதேவிக்‍கு நினைவஞ்சலி

Mar 5 2018 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச அளவில் திரைத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்‍காவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 'டன்கிரிக்'‍ திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது. இதேபோன்று, மேலும் பல விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் நிலையில், இந்த விழா மேடையில் மறைந்த பாலிவுட் நட்சத்திரம் ஸ்ரீதேவிக்‍கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஹாலிவுட் திரைப்படங்களில் மிகச்சிறப்பான முறையில் திறமைகளை வெளிப்படுத்தும் நட்சத்திரங்கள் மற்றும் படைப்பாளிகளுக்‍கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. திரைத்துறையில் உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த ஆண்டு 90வது ஆண்டாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதையொட்டி லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வண்ணமயமான விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஹாலிவுட் திரை நட்சத்திரங்களுக்‍கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்‍கப்பட்டது. விருதுக்‍கு பரிந்துரைக்‍கப்பட்டிருக்‍கும் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் விழா அரங்கை அலங்கரித்துள்ளனர்.

இந்த விழாவில் சிறந்த துணை நடிகருக்‍கான விருது த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங் மிசௌரி படத்தில் நடித்த சாம் ராக்வெல்லுக்‍கு கிடைத்துள்ளது.

சிறந்த ஒப்பனைக்கான விருது டார்க்கஸ்ட் ஹவர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இதில் பணியாற்றிய 3 கலைஞர்களுக்‍கும் இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது பாண்டம் த்ரட் திரைப்படத்தில் பணியாற்றிய மார்க் ப்ரிட்ஜஸ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை இகாரஸ் என்ற திரைப்படம் வென்றது. சிறந்த Sound Mixing மற்றும் Sound Editing ஆகிய பிரிவுகளுக்‍கான விருதை டன்கிர்க் திரைப்படம் பெற்றுள்ளது.

இதேபோன்று சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்‍கான விருது 'தி ஷேப் ஆஃப் வாட்டர்' என்ற திரைப்படத்துக்‍கு வழங்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்‍கான விருதை சிலி நாட்டின் 'எ ஃபேண்டஸ்டிக்‍ வுமன்' என்ற திரைப்படம் தட்டிச்சென்றது.

இதைத்தொடர்ந்து சிறந்த துணை நடிகைக்‍கான விருதை Allison Janney பெற்றார். சிறந்த அனிமேஷன் குறும்படமாக டியர் பாஸ்கட்பால் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த அனிமேஷன் முழு நீள படத்துக்‍கான விருதை கோகோ திரைப்படம் பெற்றது.

இதைத் தொடர்ந்து சிறந்த திரைக்‍கதைக்‍கான விருதை கெட் அவுட் திரைப்படம் வென்றது. மேலும் சிறந்த எடிட்டிங்-க்‍கான விருதை டன்கிர்க்‍ திரைப்படம் வென்றுள்ளது. இதன் மூலம் டன்கிர்க்‍ திரைப்படம் இந்த விழாவில் மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்‍கது. தொடர்ந்து மேலும் பல பிரிவுகளுக்‍கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00