விண்வெளியில் கட்டுபாட்டை இழந்து சுற்றிக்கொண்டிருக்கும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் - இன்று அல்லது நாளை பூமியின் மீது மோதும் என அறிவிப்பு

Mar 31 2018 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

விண்வெளியில் கட்டுபாட்டை இழந்து சுற்றிக்கொண்டிருக்கும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் இன்று அல்லது நாளை பூமியின் மீது மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா கடந்த 2012 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்திய டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம், 2016 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து அந்த விண்வெளி ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும் என ஆராய்ச்சியாளர்கள் முன்கூட்டியே தெரிவித்தனர். இந்நிலையில், அந்த விண்வெளி ஆய்வு நிலையம் இன்று அல்லது நாளை பூமியின் மீது மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, அந்த ஆய்வு நிலையம் எந்தப் பகுதியில் மோதும் என உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் நியூயார்க், பார்சிலோனா, ரோம், இஸ்தான்புல், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களின் மீது மோத வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 8,500 கிலோ எடை கொண்ட அந்த ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும் போது, விண்கல் மோதிய பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும், அதில் நிரப்பட்டுள்ள எண்ணெய் போன்ற ஹைட்ரஜன் வாயுவை மனிதர்கள் சுவாசித்தால், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00