பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான Arnold Schwarzenegger உடல்நிலை திடீரென பாதிப்பு

Mar 31 2018 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான Arnold Schwarzenegger உடல்நிலை திடீரென பாதிக்‍கப்பட்டதையடுத்து, அவருக்‍கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆஸ்திரியாவில் உள்ள Tal என்ற சிறிய ஊரில் பிறந்த Arnold Schwarzenegger, ஆரம்பத்தில் ஆஸ்திரிய ராணுவத்தில் ஒருவருடம் பணியாற்றினார். தொழில்முறை உடற்கட்டு கலைஞராக இருந்துவந்த அவர், விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்‍குநர், தொழிலதிபர், அரசியல்வாதி என பன்முகத் தோற்றங்களுக்‍கு சொந்தக்‍காரர் ஆவார். இவர் நடித்த Total Recall, True lies, Predator, Terminator, Commondo போன்ற ஹாலிவிட் திரைப்படங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. குடியரசுக்‍ கட்சி சார்பில் கலிஃபோர்னியா மாகாண ஆளுநர் பதவிக்‍கு 2003-ல் போட்டியிட்டு இரண்டு முறை ஆளுநராக பதவி வகித்தார்.

70 வயதான Arnold Schwarzenegger-க்‍கு திடீரென உடல்நலக்‍ குறைவு ஏற்படவே நேற்று முன்தினம் மிச்சிகன் மாகாணம் Detroit நகரில் உள்ள Cedars-Sinai மருத்துவ மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். ரத்தகுழாய் வால்வு மாற்றப்பட வேண்டும் என்பது உடல் பரிசோதனையில் தெரியவந்தது. இந்நிலையில், திடீரென அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்‍கப்படவே, உடனடியாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. பலமணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்‍குப் பின்னர், Arnold Schwarzenegger-ன் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00