ஒரே நேரத்தில் 1,300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை

Apr 4 2018 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரே நேரத்தில் ஆயிரத்து 300 ரோபோக்கள் நடனமாடி உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ரோபோக்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இத்தாலி நாட்டில் நிகழ்ந்தப்பட்ட இந்த சாதனையில் சுமார் 1,372 ரோபோக்கள் இடம்பெற்றன. ரோபோக்கள் இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்றார் போல் நடனமாடியது. இது காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இது போன்ற ரோபோக்கள் தயாரித்து, அதனை பெரிய அளவில் நடனமாட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, 2017-ம் ஆண்டு சீனாவில் நிகழ்த்தப்பட்ட ரோபோ நடனம் தான் மிகப்பெரியதாக நடனமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் சுமார் 1,069 ரோபோக்கள் இடம்பெற்றன. தற்போது அந்த சாதனையை இத்தாலிய ரோபோ நடனம் முறியடித்துள்ளது.

இத்தாலியில் நடனமாட வைக்கப்பட்ட சுமார் 1,372 ரோபோக்கள் ஒவ்வொன்றும் சுமார் 40 சென்டி மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இவை ஆல்பா 1 எஸ் வகை ரோபோக்கள். அலுமினியத்துடன் பிளாஸ்டிக் கலந்த மெடிரியலை கொண்டு இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00