சிரியாவுக்‍கு ஆதரவு அளிக்‍கும் ரஷ்யா மீது மேலும் பல தடைகளை விதிக்‍க அமெரிக்‍கா தீவிரம் - 3ம் உலகப்போருக்‍கு வழி ஏற்படும் என உலக நாடுகள் அச்சம்

Apr 17 2018 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகள் விதிக்‍க அமெரிக்‍கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்‍காவின் இந்த நடவடிக்‍கை 3வது உலகப்போருக்‍கு வித்திடும் ஆபத்து இருப்பதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்‍கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்‍கு எதிராக அந்நாட்டு அரசு கடுமையான போர் தொடுத்து வருகிறது. இதற்கு ரஷ்யா ஆதரவாக இருந்து வருவதோடு, போர் நடவடிக்‍கைகளிலும் பங்கேற்று வருகிறது. ஆனால், இதற்கு மாறாக சிரியாவில் இயங்கும் இணக்‍குழுக்‍களுக்‍கு அமெரிக்‍கா மற்றும் அதன் நேச நாடுகள் ஆதரவாக இருந்து வருகின்றன. இந்த விவகாரத்தால் அமெரிக்‍காவுக்‍கும், ரஷ்யாவுக்‍கும் இடையே நாளுக்‍கு நாள் மோதல் வலுத்து வருகிறது. சிரியாவில் அந்நாட்டு அரசுடன் இணைந்து ரசாயன குண்டுகளை வீசியதாகக்‍ கூறி ஏற்கெனவே ரஷ்யா மீது அமெரிக்‍கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை கொண்டுவந்தன. ரஷ்யா மீது மேலும் பல தடைகளை விதிக்‍கப்போவதாகவும், இந்த நடவடிக்‍கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமெரிக்‍காவின் வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டிருப்பதாக சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்‍காவின் இந்த செயலால் 3ம் உலக‍ போர் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக பல்வேறு நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00