அமெரிக்கா, வடகொரியா அதிபர்கள் பேச்சுவார்த்தைக்கு முன், நல்லெண்ண நடவடிக்கையாக வடகொரிய சிறையில் இருந்த மூன்று அமெரிக்கர்கள் விடுதலை

May 10 2018 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் சந்திப்பின் போது பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, பியாங்யாங் சென்றுள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து, வடகொரிய சிறைகளில் இருந்த 3 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு வடகொரியாவில் கைது செய்யப்பட்ட மத போதகரான கிம் டாங்-சுல்-க்கு 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 2017 மே மாதம் கைது செய்யப்பட்ட கிம் ஹேக் சாங், கிறிஸ்துவ மிஷனரி ஊழியர் என்ற பெயரில் பியாங்யாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். 3-ம் நபரான கிம் சேங்-டக் என்பவரும் இதே அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். மூவரும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வட கொரிய சிறைகளில் இருந்தனர். அமெரிக்கா, வடகொரியா அதிபர்கள் பேச்சுவார்த்தையை வரவேற்கும் விதமாகவும், நல்லெண்ண நடவடிக்கையாகவும் இவர்கள் மூவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட மூவருடன் மைக் பாம்பியோ வந்துகொண்டிருப்பதாகவும், கிம் ஜாங்-உன்னுடன் தனது சந்திப்புக்கான இடமும் நேரமும் குறிக்கப்பட்டுள்ளதாகவும், டுவிட்டரில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00