கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சோலார் தகடுகள் பொறுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு கட்டாய சட்டம் அமல்

May 11 2018 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகம் முழுவதும் தற்போது மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மின்சாரம் தயாரிக்கும் போது அதிகளவு மாசு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முக்கிய மாகாணங்களில் சோலார் பவர் மூலம் மின்சாரம் எடுக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக கலிபோர்னியாவில் சோலார் திட்டம் பெரிய அளவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் படி இனி கலிபோர்னியாவில் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் கட்டாயமாக சோலார் பேனல்கள் பொறுத்தப்படவேண்டும், வீடு கட்ட அனுமதி வாங்கும் போது, சோலார் பேனல்கள் எப்படி பொருத்தப்படும் என்று கட்டிடத்தின் வடிவமைப்பை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே இந்த புதிய வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் 2020க்கு பின் அனைத்து வீடுகளுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும், ஒரு நபர் வசிக்க கூடிய சிறிய வீடாக இருந்தாலும் அதில் சோலார் பேனல்கள் வைக்க வேண்டும். வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதற்கு தகுந்தார் போல சோலார் பேனல்கள் வைக்க வேண்டும் என்று அம்மாகாண நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு 1 லட்சம் வரை அதிகம் செலவாகும். ஆனால் எதிர்கால மின்சார தேவைகளை பார்க்கும் போது இந்த செலவு மிகவும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாகாணத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் வரும் 2025க்குள் சோலார் பேனல்கள் பொருத்தப்படும் என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் சரியாக கடைபிடிக்கப்பட்டால், 95 சதவிகித மின்சார தேவையை கண்டிப்பாக இந்த சோலார் திட்டம் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00