அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் முதல் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி : தலைமை செயல் அதிகாரி - இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பங்கேற்பு

May 13 2018 6:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

அபுதாபி, தனது சொந்த செலவில் மங்களூரில் கட்டியுள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கிற்கு ADNOC எனப்படும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் முதல் கச்சா எண்ணெய் சரக்கு கப்பலை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Sulthan Al-Jaber மற்றும் இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மூன்றுநாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளார். இதனிடையே, இந்தியாவுடன் அபுதாபி செய்துகொண்ட ஒப்பந்தப்படி, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் முதல் கச்சா எண்ணெய் சரக்கு கப்பலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Sulthan Al-Jaber உடன், திரு. தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அபுதாபி, தனது சொந்த செலவில் பராமரிக்கும் மங்களூர் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கிற்கு இந்த கச்சா எண்ணெய் வருகிறது. இந்த கிடங்கில் 58 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முடியும்.

இதனிடையே, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, அபுதாபி அமைச்சர் Suhail Mohamed al-Mazrouei உடன் திரு. தர்மேந்திர பிரதான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00